முதலமைச்சராக பட்னாவிஸ் பதவியேற்றதற்கான காரணம் : கர்நாடக பா.ஜ.க. எம்.பி. தெரிவித்த கருத்தால் சர்ச்சை
40 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அனுப்பவே, பா.ஜ.க. மகாராஷ்டிராவில் அவசர அவசரமாக ஆட்சி அமைத்ததாக, கர்நாடக பா.ஜ.க. எம்.பி. தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
40 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அனுப்பவே, பா.ஜ.க. மகாராஷ்டிராவில் அவசர அவசரமாக ஆட்சி அமைத்ததாக, கர்நாடக பா.ஜ.க. எம்.பி. தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாத போதிலும் அவசர அவசரமாக, தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அக்கட்சி அங்கு ஆட்சி அமைத்தது. மாநில அரசிடம் இருந்த 40 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை, மத்திய அரசின் கருவூலத்திற்கு அனுப்பவே அவசர அவசரமாக பா.ஜ.க. பதவி ஏற்றதாக, கர்நாடகாவை சேர்ந்த பா.ஜ.க. எம்பி அனந்த குமார் ஹெக்டே கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அனந்த குமார் ஹெக்டே, ஒரு கட்டத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமையும் நிலை ஏற்பட்டதை சுட்டிக்காட்டினார். அப்படி வரும் நிலையில், 40 ஆயிரம் கோடி ரூபாயை கையாளும் அதிகாரம் முதலமைச்சராக வருபவருக்கு வரும். இந்நிலையில், மத்திய அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக திருப்பி அனுப்பவே பா.ஜ.க அவசர அவசரமாக ஆட்சி அமைத்ததாக அனந்த குமார் ஹெக்டே தெரிவித்துள்ளார். மேலும் பட்னாவிஸ் பதவியேற்ற 15 மணி நேரத்தில், 40 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அனந்த குமார் ஹெக்டே தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Next Story