மகாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்பு
மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கிறார்.
மும்பையில் நடைபெற்ற சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டுக் கூட்டத்தில் முதலமைச்சர் பதவிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மகாராஷ்டிரா முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார். சிவாஜி பூங்காவில் நடைபெறும் விழாவில் முதலமைச்சராக பதவியேற்க உள்ள உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு சோனியா காந்தி , மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் , காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அமைச்சரவையில் சிவசேனா கட்சியை சேர்ந்த 15 பேர் இடம்பெறுகின்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவியும் , அக்கட்சியை சேர்ந்த 13 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும், அக்கட்சியை சேர்ந்த 13 பேருக்கு அமைச்சரவையிலும் இடமளிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Next Story