மகாராஷ்டிரா வழக்கு : நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு - உச்ச நீதிமன்றம்

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிக்கு எதிரான வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பை வழங்குவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா வழக்கு : நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு - உச்ச நீதிமன்றம்
x
மகாராஷ்டிராவில், பாஜக அரசு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக் கிழமையன்று வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர் ஆட்சியை திரும்ப பெறக் கோரிய கடிதம் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்களின் கடிதம் ஆகியவற்றை சமர்ப்பிக்க  உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று காலை விவாதம் தொடங்கிய நிலையில், மகாராஷ்டிர பாஜக அரசு சார்பில் முகுல் ரோகத்கி ஆஜராகி,  தாம் அபிடவிட் தாக்கல் செய்வதால், இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கத் தேவையில்லை என்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 எம்.எல்.ஏக்களின் தலைவரான அஜித் பவாரின் ஆதரவு கடிதத்தை தொடர்ந்து ஆட்சி அமைத்ததாக கூறினார். 

170 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்ததால் தேவேந்திர பட்னாவிசை ஆட்சியமைக்க அழைத்தாகவும், சுயேச்சைகளில் பெரும்பாலனோர் ஆதரவு அளிப்பதாகவும் ஆளுநர் தரப்பில் வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சிவசேனா கூட்டணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒருவரேனும் பாஜகவுக்கு ஆதரவு கடிதம் கொடுத்துள்ளனரா என்று வினவினார். மேலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறும் வலியுறுத்தினார் .

இதையடுத்து, பெரும்பான்மையை நிரூபிப்பதில் ஆளுநருக்கு உத்தரவிடமுடியாது எனவும் 24 மணி நேரம் என காலக்கெடு விதிக்கமுடியாது எனவும் முகுல் ரோத்தகி கூறினார். சாதாரணமாக 7 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்படும் எனவும் அவர் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சஞ்சீங் கன்னா, இந்த வழக்கில் நாளை காலை பத்தரை மணி வரை தீர்ப்பை ஒத்திவைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்