"அம்பேத்கர் போன்ற அறிவார்ந்த தலைவர் உரையாற்றி இடம் மாநிலங்களவை" - மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை
அம்பேத்கர் போன்ற அறிவார்ந்த தலைவர்கள் உரையாற்றிய மாநிலங்களவையில் பல வரலாற்றுச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு, பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, மாநிலங்களவை இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதாக கூறினார்.
அம்பேத்கர் உள்ளிட்ட அறிவார்ந்த தலைவர்கள் மாநிலங்களவையில் உரை ஆற்றி இருப்பதாக கூறிய அவர்,ராதாகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் மாநிலங்களவையில் பல அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.ஒரே, நாடு ஒரே வரி என்ற சட்டம், மாநிலங்களவையால் தான் நடைமுறைக்கு வந்தது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாட்டை முன்னேற்றுவதில் மாநிலங்களவைக்கு முக்கிய பங்கு உண்டு என்றார்.
காஷ்மீருக்கு சிறந்து அந்தஸ்து அளித்து வந்த 370 -வது பிரிவை நீக்க, மாநிலங்களவை ஆதரவு தந்ததாக கூறிய அவர், இங்கு பல
வரலாற்று சிறப்பு மிக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Next Story