"நாடாளுமன்ற கூட்டம் முக்கியமானது - ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்" : எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

நாடாளுமன்ற கூட்டம் மிக முக்கியமானது என்பதால் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டம் முக்கியமானது - ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் : எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்
x
குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளித்ததால் கடந்த நாடாளுமன்ற கூட்டம் மிக சிறப்பாக அமைந்தது என்றார். இது மத்திய அரசுக்கோ கருவூல அமர்வுக்கோ கிடைத்த வெற்றி அல்ல ஒட்டு மொத்த நாடாளுமன்றத்திற்கு கிடைத்த வெற்றி என பெருமிதம் கொண்டார். அதேபோல் இந்த ஆண்டின் இறுதி கூட்டம் இது என்பதால், கூட்டத்தொடர் நல்ல முறையில் அமையும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். அனைத்து விஷயங்களையும் திறந்தமனதுடன் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் மிக முக்கியமான கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  

Next Story

மேலும் செய்திகள்