"4 மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பணியிடமாற்றம்" - அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு
தமிழகத்தில் நான்கு மருத்துவக் கல்லூரி டீன்களை பணியிடம் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த திருமால் பாபு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த பாலாஜிநாதன், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த விஜயகுமார், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த வனிதா, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Next Story