"மோடியை சந்திக்க ஜி.கே. வாசன் டெல்லி பயணம்"

மத்திய அமைச்சர் பதவி கொடுக்க முடிவு என தகவல்
மோடியை சந்திக்க ஜி.கே. வாசன் டெல்லி பயணம்
x
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், த. மா.கா தலைவர் ஜி.கே. வாசன், டெல்லி விரைந்துள்ளார். தற்போது டெல்லியில் தங்கி இருக்கும் ஜி.கே. வாசன்,
நாளை, புதன்கிழமை காலை 10.30 மணிக்கு, பிரதமர் இல்லத்தில், மோடியை சந்திக்கிறார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என த.மா.கா வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால்,  வாசனுக்கு மத்திய கேபினட் அமைச்சர் பதவி கொடுக்க, பாஜக முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்க இருக்கும் சூழலில், பிரதமர் மோடியுடனான வாசனின் சந்திப்பு, தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்