"மகாராஷ்டிராவில் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்து விட்டன" - பிரதமர் மோடி பிரசாரம்
ஒரு காலத்தில் மகாராஷ்டிராவில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய கும்பல், தற்போது, வெவ்வேறு நாடுகளில் குடியேறிவிட்டதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சியினரின் பிரசாரம், களைகட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி, அகோலா என்ற இடத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஒரு காலத்தில், மகாராஷ்டிராவில் இருந்த வெறுப்பு சம்பவங்கள் தற்போது விலகி விட்டதாக கூறினார். பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் வேறு நாடுகளுக்கு தப்பிச்சென்றதாக கூறிய பிரதமர் மோடி, இவை அனைத்தும் எப்படி நடந்தன என கேள்வி எழுப்பினார்.
Next Story