"தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை" - ஜி.கே. வாசன்
"அ.தி.மு.க.வுக்கு எதிரி கட்சியாக தி.மு.க. உள்ளது"
நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே. வாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்த்தில் திமுக குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று துடித்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். அதற்காக திமுக போட்ட திட்டங்களை அடித்து நொறுக்கிய பெருமை அதிமுகவை சாரும் என்றும், திமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை, எதிரிக் கட்சியாக செயல்படுவதாகவும் வாசன் புகார் தெரிவித்தார்.
Next Story