"தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளது" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

"அதனால்தான் சீன அதிபர் தமிழகம் வருகிறார்"
x
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும்  தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்று, ஆயிரத்து 729 பயனாளிகளுக்கு 6 கோடியே 36 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம் வழங்கினர். அதன் பின்னர் பேசிய  அமைச்சர் மாபா பாண்டியராஜன், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் சீன அதிபர்  தமிழகம் வருகிறார் என்றும், பண்பாடும், பாதுகாப்பும் இருப்பதாலே பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு இங்கு சாத்தியமாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்