அவதூறு வழக்கில் நாளை சூரத் நீதிமன்றத்தில ஆஜராகிறார் ராகுல்காந்தி

அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நாளை குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
அவதூறு வழக்கில் நாளை சூரத் நீதிமன்றத்தில ஆஜராகிறார் ராகுல்காந்தி
x
அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நாளை குஜராத்  மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடி குறித்து, ராகுல்  அவதூறாக கருத்து தெரிவித்ததாக கூறி, சூரத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் அவர் நாளை ஆஜராக, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, நாளை நீதிமன்றம் வரும் ராகுல்காந்திக்கு, விமானம் நிலையம் முதல் நீதிமன்றம் வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்று,  குஜராத் மாநில காங்கிரஸ்  தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்