"காற்றின் தரத்தை மேம்படுத்த பட்டாசை தவிர்க்க வேண்டும்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வேண்டுகோள்
காற்றின் தரத்தை மேம்படுத்த தீபாவளிக்கு பசுமை பட்டாசு பயன்படுத்த வேண்டும் என, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காற்று மாசு அதிகரித்து வருவதால், லட்சக்கணக்கான மக்கள் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து வருவதாக கூறினார். இதனால், டெல்லியில், காற்றின் மாசு பரவலாக குறைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தீபாவளிக்கு, பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.
Next Story