சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டம் : விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் வரும் 27 ஆம் தேதி, கோவையில் நடத்த இருந்த முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், கோவை மாநகராட்சி நிர்வாகம், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த "சூயஸ்" என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ள குடிநீர் பராமரிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க. கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை வலியறுத்தி, கோவையில் வரும் 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த முழு அடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரி தினேஷ்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு, உச்சநீதிமன்றம் மற்றும் கேரள உயர்நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி போராட்டத்துக்கு தடை விதித்தனர். மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Next Story