தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : நோட்டீஸ் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தகுதி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடக 17 எம்.எல்.ஏ.க்கள் குறித்த வழக்கில் அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா, தினேஷ் குண்டுராவ், உள்ளிட்டோர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடக 17 எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைத் தலைவரின் முடிவை எதிர்த்து தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பில், கர்நாடக இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த புதிய மனுவை விசாரணைக்கு ஏற்பதாக கூறிய நீதிபதிகள், சட்டப்பேரவை சபாநாயகர், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா, தினேஷ் குண்டுராவ், உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டனர். மேலும் வழக்கு மீதான விசாரணையை செப்டம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Next Story