"மோடி ஆட்சியில் நாட்டில் 50 லட்சம் பேர் வேலையிழப்பு"

பா.ஜ.க. ஆட்சியின் தோல்விகளை விமர்சித்தால் வழக்குப் பாயும் என்ற நிலை தற்போது நாடு முழுவதும் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
மோடி ஆட்சியில் நாட்டில் 50 லட்சம் பேர் வேலையிழப்பு
x
ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து,  சென்னை ஜமாலியாவில் நேற்று கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.  இதில் பேசிய அக்கட்சியின்  தேசிய செயலாளர் சஞ்சய் தத், மத்திய அரசு பழிவாங்கும் அடிப்படையிலேயே காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றம்சாட்டினார். மோடியின் கடந்த ஆறு ஆண்டுக்கால ஆட்சியில் 50 லட்சம் பேர் வேலையிழந்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, பல்வேறு துறைகளின் வளர்ச்சியை தடுத்த மோடி அரசு தற்போது கல்வித் துறையிலும் அதன் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கி உள்ளதாக குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்