சிவகுமாருக்கு வரும் 17ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் விசாரணை காவலை வரும் 17ஆம் தேதி வரை நீடித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் விசாரணை காவலை வரும் 17ஆம் தேதி வரை நீடித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் சிவகுமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் விசாரணை காவல் முடிவடைந்த நிலையில் சிவகுமார் மீண்டும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிவகுமார் 800 கோடி ரூபாய் அளவில் பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக மத்திய அரசின் கூடுதல் ஜெனரல் நட்ராஜ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போது சிவகுமார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், சிவகுமாருக்கு உடல் நலம் குன்றியுள்ளதால், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சிவகுமாருக்கு முதலில் சிகிச்சை அளித்துவிட்டு, விசாரணை நடத்தும்படி அறிவுறுத்தி காவலை 17ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார். .
Next Story