ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு - நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கை திரும்ப பெற்றார் சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு - நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கை திரும்ப பெற்றார் சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் தனக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதற்கு எதிராகவும் ஜாமீன் வழங்கக் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி சுரேஷ் குமார் கெய்த் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு இல்லை என கபில்சிபல் வாதிட்டார். ப. சிதம்பரம் தனது பதவியை தவறாக பயன்படுத்தி உள்ளதற்கு வலுவான ஆதாரம் உள்ளதாக அரசு தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா வாதிட்டார். மேலும் இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும் துஷார் மேத்தா தெரிவித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ப.சிதம்பரம் மோசடியில் ஈடுபட்டு உள்ளார் என்று கருதியே உச்சநீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீனை மறுத்ததாகவும் துஷார் மேத்தா வாதிட்டார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சி.பி.ஐ. நீதிமன்றம் முன் ஜாமீனை நிராகரித்த அதே நாளில் உச்ச நீதிமன்றத்தை நாடிய நீங்கள் ஏன் உயர் நீதிமன்றத்தை நாடவில்லை? ப.சிதம்பரம் தரப்பை பார்த்து கேள்வி எழுப்பினார். மேலும் ஏன் கீழமை நீதிமன்றத்தில் உடனடியாக அந்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யவில்லை ? என்று ப.சிதம்பரம் தரப்பை பார்த்து கேள்வி எழுப்பிய நீதிபதி, தற்போது இங்கு வந்து அவசரமாக வழக்கை விசாரிக்க கோருவரு ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த ஜாமீன் மனு? நீதிமன்ற காவலுக்கு எதிரான மனுவா? ஜாமீன் மனுவா? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி 7 நாட்களுக்குள் நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு நீதிபதி சுரேஷ்குமார் கெயத் உத்தரவிட்டார். இதனிடையே நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கை சிதம்பரம் வாபஸ் பெற்றதை அடுத்து சிதம்பரம் ஜாமீன் கோரி மனு மீதான விசாரணை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Next Story