திகார் சிறையில் என்ன சாப்பிட்டார் ப. சிதம்பரம்..?

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் உடல் நிலையை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்கிற தகவல்கள் வெளிவந்துள்ளன.
x
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப. சிதம்பரத்தை  வரும் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதால், நேற்றிரவு முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில், அவருக்கு பல்வேறு அடிப்படை வசதிகளுடன்  டிவி  உள்ளிட்ட வசதிகளும் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிறை வளாகத்தில் நடக்கவும், பொது நூலகத்தை பயன்படுத்தவும், செய்தித்தாள் அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வு இல்லாத காரணத்தால், சிறையில் அடைக்கப்பட்டபோது மிகவும் சோர்வாக காணப்பட்டதால் அதிகாரிகள் அவரது உடல் நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நேற்றிரவு சிறையில் வழங்கப்பட்ட சப்பாத்தி சாப்பிட்ட சிதம்பரம், இன்று காலை பிரட் துண்டுகள், கஞ்சி மற்றும் போஹா எனப்படும் அவல் உணவும் எடுத்துக் கொண்டுள்ளார்.காலை உணவுக்கு பின் தேநீர் குடித்த அவருக்கு, மதிய உணவாக சிறையின் வழக்கமான உணவான ரொட்டி, பருப்பு குழம்பு, அரிசி சாதம் ஆகியவை வழங்கப்பட்டது. காலை உணவு, காலை  8 மணிக்குள்ளும், இரவு உணவு,  இரவு 8 மணிக்குள்ளும் வழங்கப்படும்.

இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை சிறைக்குள் அடைக்கப்படுவார் என்றும் சிறை தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஆண்டு , இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் சிறையில் 7 ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதும், அதே வழக்கில் கைதான சிதம்பரம், தற்போது அதே அறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்