ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு ஒத்திவைப்பு, வலுவான ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவு
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக வெளிநாடுகளில் திரட்டப்பட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வழக்குக்கு புத்துயிர் கொடுத்து அதனை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறிய நீதிபதி சைனி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
'ஏர்செல்' நிறுவனத்தில் 'மேக்சிஸ்' நிறுவனம் அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை 6 வார காலம் அவகாசம் கோரியது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக வெளிநாடுகளில் திரட்டப்பட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வழக்குக்கு புத்துயிர் கொடுத்து அதனை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறிய நீதிபதி சைனி, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
Next Story