டெல்லியில் ப.சிதம்பரம் கைது - சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடி
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்று நள்ளிரவில் கைது செய்தனர்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவர் முறையிட்டார். அதன் மீது நாளை விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். மாலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விட்டு, தனது வீட்டுக்கு சென்றார். அவருடன் அபிசேக் சிங்வி, கபில் சிபல் ஆகிய மூத்த வழக்கறிஞர்களான காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, வீட்டின் காம்பவுண்ட் கதவுகள் மூடப்பட்டன. இதனால், சிபிஐ அதிகாரிகள், சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரம் வீட்டிற்குள் சென்றனர்.
Next Story