யார் துணையுமின்றி ஒரு கிராமத்துக்கு வர தயாரா? முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்

யாருடைய துணையும் இன்றி முதலமைச்சர் தனியாக ஒரு கிராமத்திற்கு சென்றால் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்களா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
x
சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில், காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா, அதன் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தமிழக முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய ஸ்டாலின், காமராஜர் தொண்டருக்குத் தொண்டராக - தலைவருக்குத் தலைவராக இருந்தவர் என்றார். தாழ்ந்த தமிழகம் தலை நிமிர காமராஜர் வழி நின்று சபதம் ஏற்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தை தாம் பார்வையிட்டபோது தன்னை முதலமைச்சர் விமர்சித்ததாக குறிப்பிட்ட ஸ்டாலின், தனக்கு விளம்பரம் அவசியம் இல்லை என்றார். ஒரு கிராமத்திற்கு யாருடைய தயவும் இல்லாமல் தனியாக தாம் சென்றால், மக்கள் அடையாளம் காண்பார்கள் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், அதேபோல போலீஸும் எஸ்.கார்டும் இல்லாமல் ஒரு கிராமத்திற்கு முதலமைச்சர் சென்றால் மக்கள் அடையாளர் காண்பார்களா பார்க்கலாம் என சவால் விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்