"ஜம்மு- காஷ்மீரில் வளர்ச்சி நிச்சயம்" - பிரதமர் மோடி உறுதி

ஜம்மு- காஷ்மீரில், விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீரில் வளர்ச்சி நிச்சயம் - பிரதமர் மோடி உறுதி
x
ஜம்மு- காஷ்மீரில், விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார். டெல்லியில், செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், உள்ளூர் மக்களின் விருப்பப்படி, ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் வளர்ச்சி இருக்கும் என்றார். 370 வது பிரிவு மற்றும் 35 ஏ ஆகிய பிரிவுகள் மக்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது என குறிப்பிட்ட பிரதமர் நரேந்திரமோடி, வளர்ச்சியை தடுத்துக்கொண்டிருந்த சங்கிலி, இப்போது உடைந்து விழுந்து விட்டதாக விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்