வேலூர் தொகுதியில் இன்று முதலமைச்சர் 2வது கட்ட பிரசாரம்

வேலூர் மக்களவை தொகுதியில், தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால், பிரசாரம் சூடு பிடித்துள்ளது
வேலூர் தொகுதியில் இன்று முதலமைச்சர் 2வது கட்ட பிரசாரம்
x
வேலூர் மக்களவை தொகுதியில், தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால், பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அதிமுக கூட்டணி வேட்பாளர்
ஏ. சி சண்முகத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 2 - வது கட்ட பிரசாரத்தை, இன்று துவக்குகிறார். மாலை 5 மணிக்கு, அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாலை 6 மணிக்கு மேல், வேலூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இவ்விரு கூட்டங்களுக்கும் செல்லும் வழியில், சாலையோரம் மக்களை சந்தித்து, ஏ. சி சண்முகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்