ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கும் வழக்கு : ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு
ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு, ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் 11 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கட்சித் தாவல் தடைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோருவது நீர்த்துபோனதால், வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல என்று சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிட்டார். தகுதி நீக்கம் செய்யும் கோரிக்கையை திமுக திரும்ப பெற்றுவிட்டதால், வழக்கு முடிந்துவிட்டதே என நீதிபதிகள் கூறினர். இதற்கு, பதிலளித்த திமுக தரப்பு வழக்கறிஞர் கபில்சிபல், சபாநாயகருக்கு உத்தரவிடுவது தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வில் உள்ளதால், அது முடியும் வரை காத்திருக்க முடியாது என்றார். எனவே, நீதிமன்றமே தகுதி நீக்கம் செய்யலாம் என்றும் வாதங்களைஅவர் முன்வைத்தார். அரசியல் சாசனம் 226 பிரிவை பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்களை நீதிமன்றமே தகுதி நீக்கம் செய்ய அதிகாரம் உள்ளது என்ற வாதத்தை முன்வைத்த அவர், வழக்கை ஒத்திவைக்குமாறும் கோரினார். இதை தொடர்ந்து ஆகஸ்ட் 20ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Next Story