கர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்தி வைப்பு - சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவு
நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது மேலும் பல உறுப்பினர்கள் பேச உள்ளதால், கர்நாடக சட்டப்பேரவை, வரும் திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
நேற்று காலை சட்டப்பேரவை கூடியதும், முதலமைச்சர் குமாரசாமி, பா.ஜ.க.வினர் ஆட்சி நடத்த விடாமல், இடையூறாக இருப்பதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து விவாதம் நடைபெற்று வந்த நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வஜூபாய் வாலா, முதலமைச்சர் குமாரசாமிக்கு இருமுறை, கெடு விதித்தார். ஆனால், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை. இந்நிலையில், வரும் 22 ஆம் தேதி திங்கட்கிழமையன்று, விவாதம் நடத்த சபாநாயகரிடம், கூட்டணி கட்சியினர், கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை காலை 11 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவையை சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்தி வைத்தார்.
Next Story