"எண்ணெய் கிணறு அமைக்கும் அனுமதியை ரத்து செய்க" - எம்.பி. திருமாவளவன்
தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் புதிய அனுமதிகளை மத்திய அரசு, ரத்து செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் புதிய அனுமதிகளை மத்திய அரசு, ரத்து செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், வேதாந்தா நிறுவனத்துக்கு புதிய அனுமதிகள் வழங்கியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தார். இரண்டாயிரத்து 500 அடி ஆழம் வரை கிணறுகள் தோண்டப்படுவதால், நிலத்தடி நீரும், நிலமும் பாதிக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்தார். உடனடியாக எண்ணெய் கிணறுகள் அமைக்கும் புதிய அனுமதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற திருமாவளவன், டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்
Next Story