எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பாக சபாநாயகர் இன்றே முடிவு எடுக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பாக இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முடிவு எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பாக சபாநாயகர் இன்றே முடிவு எடுக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
x
கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில்  கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பதவி விலகல் கடிதம் அளித்துள்ள  எம்எல்ஏக்கள் 10 பேர் தொடர்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எம்எல்ஏக்கள் 10 பேரும் சாபநாயகர் முன்பு இன்று மாலை 6 மணிக்குள் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பெங்களூரு செல்லும் எம்எல்ஏக்களுக்கு உரிய பாதுாப்பு வழங்க வேண்டும் எனவும் கர்நாடகா டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பாக இன்றைக்குள் கர்நாடக சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக நாளை காலை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை  தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 8 பேரின் ராஜினாமா கடிதங்கள் உரிய முறையில் இல்லை"

இதனிடையே, எம்எல்ஏகள் 8 பேரின் ராஜினாமா கடிதம் உரிய முறையில் தாக்கல் செய்யப்படவில்லை என சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். அவர்கள் ராஜினாமா செய்ய விரும்பினால் முறைப்படி மீண்டும் கடிதம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்