நெல்லை மாவட்ட அ.ம.மு.க. கூடாரம் காலி - முதலமைச்சர் பழனிசாமி

திருநெல்வேலி மாவட்டத்தில் அ.ம.மு.க. கூடாரம் காலி ஆகிவிட்டதாக முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
x
தென்காசியில், அ.ம.மு.க.வை சேர்ந்த 20 ஆயிரம் பேர், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தலைமையில், அ.தி.மு.க.-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த விழாவில், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி,  திருநெல்வேலி மாவட்டத்தில் அ.ம.மு.க. கூடாரம் காலி ஆகிவிட்டதாக கூறினார். வரவுள்ள நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்