வேலை வாய்ப்புக்கான சிறப்பு திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் : நிதிநிலை அறிக்கை குறித்து தினகரன் கருத்து
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, புதிய இந்தியா குறித்து மக்களுக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி இருப்பதாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, புதிய இந்தியா குறித்து மக்களுக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி இருப்பதாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதித்திருப்பது விலைவாசியை அதிகப்படுத்தும் என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வறட்சி நிலவும் நிலையில் விவசாயத்திற்கான சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், வேலை வாய்ப்புக்கான சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
Next Story