பட்ஜெட் பாரம்பரியங்களில் ஒன்றான சூட்கேஸூக்கு குட்பை : புதிதாக சிவப்பு நிற துணிப்பையில் பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு நிதியமைச்சர்கள் எப்போதும் வழக்கமாக கொண்டு செல்லும் சூட்கேசிற்கு விடை கொடுத்துள்ள அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய முறைக்கு மாறியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, நிதியமைச்சர்கள் வழக்கமாக சூட்கேஸ்களை கையில் எடுத்துக் கொண்டு வருவதை பார்த்திருப்போம். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நிதியமைச்சகத்தில் இருந்து குடியரசுத் தலைவரை சந்திக்க செல்லும் போது நிதியமைச்சர் கையில் சூட்கேஸ் வைத்துக் கொண்டு செல்வார். இந்த நடைமுறையை ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் பார்க்க முடியும். இதற்கு முன் நிதியமைச்சர்களாக இருந்த அருண் ஜேட்லி, ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் என அனைவரும் இந்த நடைமுறையை பின்பற்றி வந்தனர். இந்த நிலையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் சூட்கேஸூக்கு குட்பை சொல்லியுள்ளார்.
Next Story