வைகோவின் சிறை வாழ்க்கை - ஒரு பார்வை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது அரசியல் வாழ்வில் 28 முறை சிறை சென்றுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது அரசியல் வாழ்வில் 28 முறை சிறை சென்றுள்ளார். இதுவரை அவர் நான்காண்டு காலம் சிறையில் கழித்துள்ள நிலையில், திராவிட இயக்க தலைவர்களில் அதிக நாட்கள் சிறையில் இருந்தவர் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
வைகோ திமுகவில் இருந்த போது, 1976 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கு மறுநாள் பிப்ரவரி 1 ம் தேதி நெல்லை மாவட்டத்தில் மிசா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மிசா சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில், திமுக சார்பில் கைதான முதல் நபர் வைகோ என்பது வரலாறு...
பின்னர் 1977 ஆம் ஆண்டு, பிப்ரவரி2 ஆம் தேதி ஒராண்டு மிசா சிறை காலத்தை கடந்து விடுதலை ஆனார் வைகோ. அதே ஆண்டு மதுரைக்கு வந்த இந்திராகாந்திக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் பங்கெடுத்து கைது ஆகி 40 நாள் சிறையில் இருந்தார் வைகோ.
1978 முதல் 1981 வரை ஆளும் கட்சியை எதிர்த்து 22 முறை போரட்டங்களின் பங்கேற்ற வைகோ, 1978-81 வரை 4 முறை தொண்டர் படை பயிற்சி முகாம்களை நடத்தினார். இந்த காலக்கட்டத்தில் ஆட்சிக்கு எதிராக ராணுவத்தை உருவாக்குகிறார் வைகோ மீது விமர்சனம் வைக்கப்பட்டதுடன், கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக, 2002, ஜூலை 11இல் சென்னை விமான நிலையத்தில் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட
வைகோவை 12 ஆம் தேதி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
காவிரி பிரச்சினைக்காக 2003ம் ஆண்டில் வைகோ சிறையில் இருந்து கொண்டே, கைதிகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
577 நாட்கள் சிறையில் இருந்த வைகோ 2004ம் ஆண்டு பிப்ரவரி
7ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மதிமுக சார்பில், ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்று பேசிய வைகோ, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாகவும் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், அவரை விடுதலை செய்து 2016 ல் தீர்ப்பளித்தது.
Next Story