பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் முதல் பெண் நிதியமைச்சர்
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில், முதல் முறையாக தனிப்பொறுப்புடன் முதல் பெண் நிதியமைச்சர் என்கிற பெருமையுடன் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் நிர்மலா சீதாராமன்.
முதல் முறையாக தனிப்பொறுப்புடன், பெண் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது, 1970 ஆண்டு கூடுதல் பொறுப்பாக நிதித்துறையை கவனித்து வந்ததால், அந்த ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
தற்போது தனது முதல் பட்ஜெட் தாக்கலுக்காக முழுவீச்சில் தயாராகி வரும் நிர்மலா சீதாராமன், பொருளாதார வல்லுநர்கள், பல்வேறு தொழில் துறை நிபுணர்களுடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்தார்.
1959 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த நிர்மலா, திருச்சி சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரியில் பட்டப்படிப்பும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொருளாதாரமும், லண்டன் பொருளாதார பள்ளியில் ஆய்வியல் பட்டமும் பெற்றுள்ளார்.
லண்டனில் பணி வாழ்க்கையைத் தொடங்கியவர் , சர்வதேச பொருளாதார ஆலோசனை நிறுவனமான பிரைஸ்வாட்டர் ஹவுஸில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
1991 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர், 2006 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து செய்தித் தொடர்பாளராக பணியாற்றியதுடன், 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் கட்சியில் பிரபலமடையத் தொடங்கினார்.
கடந்த பாஜக ஆட்சியில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று செயல்பட்டார்.
தற்போது தனது 60 வது வயதில், இந்தியாவின் நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் , இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்
Next Story