"தொகுதி பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் மக்களுடன் சேர்ந்து போராடும் சூழல் ஏற்படும்" - நாராயணசாமிக்கு காங்கிரஸ் எம்எல்ஏ கடிதம்

தொகுதி பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவேன் என புதுச்சேரி முதலமைச்சருக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ கடிதம் எழுதியுள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொகுதி பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் மக்களுடன் சேர்ந்து போராடும் சூழல் ஏற்படும் - நாராயணசாமிக்கு காங்கிரஸ் எம்எல்ஏ கடிதம்
x
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன். இவர், முதலமைச்சர் நாராயணசாமிக்கு, கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமது தொகுதியில் இலவச மனைப்பட்டா வழங்குதல், குமரகுரு பள்ளத்தில் உள்ள பழைய அடுக்குமாடி குடியிருப்பை அகற்றிவிட்டு புதிதாக கட்டுதல் உள்ளிட்ட 8 முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் தொகுதி மக்கள் மத்தியில் அவப்பெயர் நிலவி வருவதாகவும் அவர் கூறியுள்ளளார். இந்த விவகாரத்தில் வரும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக, முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.  நடவடிக்கை எடுக்காவிட்டால் தொகுதி மக்களுடன் இணைந்து, தானும் வீதியில் இறங்கி போராடும் சூழல் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்