"ஒரு சில தொழிலதிபர்கள் நலனுக்காக அரசு செயல்படுகிறது" - மக்களவையில் சோனியா காந்தி குற்றச்சாட்டு
நவீன இந்தியாவின் கோவில் என, இந்தியாவின் முதல் பிரதமரான நேரு கூறிய, பொதுத் துறை நிறுவனங்களில், பெரும்பாலானவை ஆபத்தில் உள்ளதாக சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.
நவீன இந்தியாவின் கோவில் என, இந்தியாவின் முதல் பிரதமரான நேரு கூறிய, பொதுத் துறை நிறுவனங்களில், பெரும்பாலானவை ஆபத்தில் உள்ளதாக சோனியா காந்தி குற்றம் சாட்டினார். மக்களவையில் பேசிய அவர், 'பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்ட முடியாமல், தற்போது அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாத நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டி, அந்த நிறுவன ஊழியர்கள் இக்கட்டில் உள்ளதாக, அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார். ஒரு சில தொழிலதிபர் நலனுக்காக, பொதுத்துறை நிறுவனங்களின் நலனை பாதிக்கும் வகையில், அரசு செயல்படுவதாக கூறிய சோனியாகாந்தி, மோடி தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்தார்.
Next Story