பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி
x
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், இன்று காலை  டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, சில உறுப்பினர்களின் செயல்பாடுகளைக் கண்டித்து பேசியதாக கூறப்படுகிறது.அரசியலில் கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும்,  கண்ணியக் குறைவாக நடந்து கொள்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும், மிகவும் கடுமையான வார்த்தைகளால் பிரதமர் எச்சரிக்கை செய்ததாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரான விஜய் வர்கியாவின் மகன் ஆகாஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும்,  சில அதிகாரிகளை கிரிக்கெட் மட்டையில், அடித்து விரட்டுவது போன்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனைக் குறிப்பிடும் விதமாக பிரதமர் மோடி எச்சரிக்கை செய்ததாகவும், கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்