காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி மேலும் 6 மாதம் நீட்டிப்பு : மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்தார் அமித்ஷா
காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்கும் மசோதாவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்கும் மசோதாவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதுவரை அங்கு மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்கான மசோதா மற்றும் காஷ்மீர் இடஒதுக்கீட்டு மசோதா ஆகிய 2 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. முன்னதாக மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த இரு மசோதாக்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
Next Story