பரபரப்பான சூழலில் சட்டப்பேரவை தொடக்கம் : மறைந்த உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல்
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே, தமிழக சட்டப்பேரவை இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மறைந்த முன்னாள் உறுப்பினர்களான சுந்தரதாஸ், பஞ்சவர்ணம், சுப்பிரமணியம், முனுசாமி, செல்வராஜ், சுந்தரவேல், ராமநாதன் மற்றும் சிவசுப்பிரமணியன் ஆகிய 8 பேரின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. மேலும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி ராதாமணி ஆகியோருக்கும் பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழக சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து மீண்டும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அப்போது, அனைத்து துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. அதேசமயம், தண்ணீர் தட்டுப்பாடு, மும்மொழி கொள்கை, உள்ளாட்சி தேர்தல், நீட், அணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
Next Story