காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் : ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தலைவரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் தன்னுடைய தலையீடு இருக்காது என்றும் ராகுல்காந்தி கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வென்ற நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல்காந்தி அறிவித்தார். அதனை கட்சி தலைமை ஏற்கவில்லை என்றாலும், தன்னுடைய நிலைபாட்டில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகிறார்.இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் என்றார். தலைவரை தேர்வு செய்யும் விஷயத்தில் தன்னுடைய தலையீடு இருக்காது என்றும், தலைவரை தேர்வு செய்வது வெளிப்படையாகவே நடக்கிறது என்றும் குறிப்பிட்டார். ரபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது என்கிற தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து விலகவில்லை என்றும் ராகுல் காந்தி கூறினார்.
Next Story