வேண்டுமென்றே அரசு மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் ஸ்டாலின் - அமைச்சர் ஜெயக்குமார்

வேண்டுமென்றே அரசு மீது பல குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்தி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது அவரால் நிறைவேற்ற முடியாத பல திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதை பொறுக்க முடியாததால் தான் வேண்டுமென்றே பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் தேவைகள் குறித்து முதலமைச்சர் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் வீண் அவதூறு பரப்பும் வகையில் ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டு இருப்பது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பிரதான தேவைகளாக உள்ள 29  முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளதாகவும், ஆனால் அதைப் பற்றி எல்லாம் முழுமையாக தெரிந்து கொள்ளாத ஸ்டாலின், அவதூறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார். 5 ஆண்டுகள் சென்னை மேயராகவும், 5 ஆண்டுகள் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்த ஸ்டாலினால் நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம் அதிமுக அரசு நிறைவேற்றி வருவதாகவும், இதை பொறுக்க முடியாத ஸ்டாலின் அவ்வப்போது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை அரசு மீது சுமத்தி வருவதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்