4 முக்கிய கட்சிகளுடன் மேற்குவங்க ஆளுநர் இன்று ஆலோசனை
மேற்குவங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, அம்மாநிலத்தில் உள்ள நான்கு முக்கிய கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
மேற்குவங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, அம்மாநிலத்தில் உள்ள நான்கு முக்கிய கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இதில் பங்கேற்க, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பார்தா சாட்டர்ஜி, பா.ஜ.க.வின் திலிப்கோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.கே.மிஸ்ரா மற்றும் காங்கிரசின் எஸ்.என். மித்ராவுக்கு ராஜ்பவனில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பின்னரான கலவரம் தொடரும் நிலையில், இதுகுறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உள்துறை அமைச்சரை அண்மையில், ஆளுநர் கேசரி நாத் திரிபாதி சந்தித்துவிட்டு வந்த நிலையில், இந்த கூட்டத்திற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story