இந்தியை தமிழக மக்கள் மீது திணிக்கக்கூடாது - ராமதாஸ்
இந்தியை தமிழக மக்கள் மீது மத்திய அரசு திணிக்கக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியை தமிழக மக்கள் மீது மத்திய அரசு திணிக்கக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி மொழியைத் திணிக்கும் நோக்கத்துடன் தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு தயாரிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக எட்டாம் வகுப்பு வரை தாய்மொழி வழிக் கல்வியை கடைபிடிக்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், மும்மொழிக் கொள்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story