3-ஆம் தேதி கூடுகிறது, புதுவை சட்டசபை : புதிய சபாநாயகர் தேர்வு செய்ய உத்தரவு

பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி சட்டப்பேரவை, நாளை மறுநாள் கூடுகிறது. அன்றைய தினமே, புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
3-ஆம் தேதி கூடுகிறது, புதுவை சட்டசபை : புதிய சபாநாயகர் தேர்வு செய்ய உத்தரவு
x
புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். தேர்தலில் போட்டியிடுவதற்காக வைத்திலிங்கம் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் காலியாக உள்ள சபாநாயகர் பதவிக்கு, நாளை மறுநாள் திங்கட்கிழமை, தேர்தல் நடத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் வின்சன்ட் ராயர் வெளியிட்டுள்ளார். அதில் வருகிற 3ஆம் தேதி சட்டப்பேரவை கூடுவதாகவும், அன்றைய தினமே சபாநாயகர் தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளா​ர். மேலும் நியமன சீட்டுகளை அளிப்பதற்கான அறிவிப்பு, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியின் புதிய சபாநாயகர் யார் என்பது, வருகிற 3ம் தேதி தெரிந்து விடும்.

Next Story

மேலும் செய்திகள்