நாடாளுமன்ற காங். குழு தலைவரானார், சோனியா
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியாகாந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
புதுடெல்லியில், உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தலைமையில், அக்கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் நடந்தது. இதில், நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்தார். இதையடுத்து ஏகமனதாக சோனியாகாந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு சோனியாகாந்தி தலைவராக இருப்பார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சோனியாகாந்தி, நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story