மோடி பதவியேற்பு விழா : தலைவர்கள் பங்கேற்பு

நரேந்திரமோடி 2 - வது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
மோடி பதவியேற்பு விழா : தலைவர்கள் பங்கேற்பு
x
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார்,  மற்றும் தேசிய தலைவர்கள் பலரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.தொழிலதிபர் முகேஷ் அம்பானி, குடும்பத்துடன் விழாவில் பங்கேற்றார். தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, இன்போசிஸ் நாராயணமூர்த்தி உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.  அதேநேரம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் புறக்கணித்தனர். இதனிடையே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படாததால்,  அக்கட்சியின் எம்பிக்கள் யாரும், பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில், பங்கேற்கவில்லை.

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு :



பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இருவரும் கலந்து கொண்டனர். தமிழக அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மனைவி லதாவுடன் நடிகர் ரஜினிகாந்த்,சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர்.



Next Story

மேலும் செய்திகள்