கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் : 72 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
கர்நாடகாவில் 79 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 72 பேர் மட்டுமே எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலில், கர்நாடகாவில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், அந்த மாநிலத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாக நடைபெறும் என்று பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்ததால் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பெங்களூருவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 79 பேரில் 72 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். பங்கேற்காத 7 பேரில் 5 பேர், அதற்கான காரணத்தை கடிதம் மூலம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ரமேஷ் ஜார்கி ஹொளி, ரோசன் பேக் ஆகிய 2 பேர் மட்டும் எந்த காரணமும் கூறாததால், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளதாக பாஜக கூறிய நிலையில், இந்த கூட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story