விடுதலை புலிகள் மீதான தடை விவகாரம் : ஆய்வு செய்ய குழு அமைத்தது மத்திய அரசு
விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்பட்டது சரியா என்பதை ஆராய்ந்து உறுதி செய்ய நீதிபதி தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்பட்டது சரியா என்பதை ஆராய்ந்து உறுதி செய்ய நீதிபதி தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. விடுதலை புலிகள் மீதான தடையை கடந்த 16ஆம் தேதி மத்திய அரசு நீட்டித்தது. புலிகள் இயக்கம் தற்போது செயல்படவில்லை என்று பல்வேறு தரப்பினர் தங்களது கருத்தை தெரிவித்தனர். இந்த நிலையில், விடுதலை புலிகள் மீதான தடையை நீட்டித்தது சரியா என்பதை உறுதி செய்ய பெண் நீதிபதி சங்கீத சிங்ரா செகல் தலைமையில் குழு அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி சங்கீத சிங்ரா, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தற்போது நீதிபதியாக இருக்கிறார். இந்த குழு அளிக்கும் அறிக்கையின் படியே விடுதலை புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படுமா இல்லை நீக்கப்படுமா என்பது தெரியவரும்.
Next Story