"மக்களின் தீர்ப்பை இந்திய குடிமகனாக ஏற்கிறேன்" - பிரதமர் மோடி, ஸ்மிருதி இரானிக்கு ராகுல் வாழ்த்து
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஒரு இந்திய குடிமகனாக ஏற்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியுள்ள பாஜகவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். தோல்வியை கண்டு காங்கிரஸ் தொண்டர்கள் அச்சப்பட்ட தேவை யில்லை என்று கேட்டு கொண்ட ராகுல்காந்தி, தொடர்ந்து போராடுவதை காங்கிரஸ் தொண்டர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
Next Story