உத்தரபிரதேச மாநில அமைச்சரவையில் இருந்து ராஜ்பர் நீக்கம்
உத்தரபிரதேச மாநில அமைச்சரவையில் இருந்து அமைச்சர் ராஜ்பர் நீக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநில அமைச்சரவையில் இருந்து அமைச்சர் ராஜ்பர் நீக்கப்பட்டுள்ளார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில், கூட்டணி கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் இடம்பெற்றிருந்தது. அந்த கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். இந்த கட்சியை சேர்ந்த மேலும் சில எம்எல்ஏக்கள் இணை அமைச்சர்களாக பொறுப்பில் இருந்தனர். இந்த நிலையில் பாஜக அரசு குறித்து ராஜ்பர் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நிலையில் அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும் கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் அவரது கடிதத்தை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர், ஆளுநர் ஒப்புதலின் பேரில் ராஜ்பரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.
Next Story