பா.ஜ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க. பங்கேற்குமா ? - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

பாஜக அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து தேர்தல் முடிவுக்கு பின் தீர்மானிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் மக்கள் நலன் கருதியும் 
8-வழி சாலை திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். காலத்திற்கேற்ப சாலை வசதி அவசியம் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்கமாட்டோம் என்று கூறினார். கூட்டணியை பொருத்தவரை அதிமுக ஒரே நிலைபாடு கொண்டுள்ளதாகவும் திமுக காலத்திற்கு ஏற்ப மாற்றி கொள்வதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்  பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ள நிலையில் அதன் அமைச்சரவையில் அதிமுக பங்கேற்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி அது குறித்து தேர்தல் முடிவுக்கு பின் தீர்மானிக்கப்படும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்