நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்...

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்...
x
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ.க. கூட்டணிக்கு ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளன. இந்நிலையில் நாளை பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். இதனிடையே, வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களும், மே 24 அன்று டெல்லியில் இருக்க பணிக்கப்பட்டு உள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்